science

img

சந்திரயான்-2 மிகப்பெரும் சாதனை நாசா விஞ்ஞானி பாராட்டு

நியூயார்க்,ஆக.27- சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தெற்கு பகுதியில் இறங்கவிருப்பது மிகப்பெரும் சாதனை என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டியுள்ளார். சந்திரயான்-2 விண்கலம் இரண்டாவது முறையாக நிலவின் மேற்பரப்பு படங்களை அனுப்பியுள்ளது. சுமார் 4375 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகி யுள்ளன. நிலவில் இருக்கும் பள்ளங்களை இந்த படம் விரிவாக காட்டுகிறது. இந்நிலையில், சந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்கவிருப்பது மிகப்பெரும் சாதனை என்றும் வெற்றிகரமான திட்டத்தை இந்தியா செயல்படுத்தி இருப்பதாகவும் நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

;